தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள், நீர் நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில தலைவர் பாலு, மாவட்ட துணை செயலாளர்கள் ஏகநாதன், ராணி, மாவட்ட இணை செயலாளர் சாந்தரூபி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாகிகளுக்கு அதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்த வேண்டும்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் நீரேற்றம் மூலம் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை, வத்தல் மலை சுற்றுலா தலம் அமைக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.க்ஷ

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, கவுதமன், கணேசன், பெரியசாமி, கருணாகரன், சாம்ராஜ், பார்த்திபன், தன்ராஜ், சென்னகேசவன் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Next Story