சத்துணவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 4-வது ஆண்டு பேரவை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 4-வது ஆண்டு பேரவை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பு வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாவட்ட பொருளாளர் அன்னபூரணம் வரவுசெலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர்கள் சத்தி, மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, பொருளாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியருக்கு குடும்ப பாதுகாப்புடன்கூடிய சட்ட ரீதியான ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் உள்ள காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story