மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வருகிற 5-ந் தேதி வரை விழா நடக்கிறது.
இந்த விழாவில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போலீஸ் துறை மூலம் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இரவிலும் அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால், தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இடைவிடாது துப்புரவு பணி யும் மேற்கொள்ளப்படுகிறது.
தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் பஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த சாதனை விளக்க கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story