அழைப்பு உங்களுக்குத்தான்
.
ஜிப்மர் :
ஜவகர்லால் முதுநிலை மருத்துவ அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ஜிப்மர் எனப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் கல்வி மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனடாமி, கார்டியாலஜி, டெலிமெடிசின், பார்மகாலஜி, சர்ஜரி உள்ளிட்ட ஏராளமான மருத்துவ பாட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 58 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணத்திற்கு டி.டி. எடுத்து விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். ஆகஸ்டு 30-ந்தேதி விண்ணப்பம் சென்றடைய கடைசிநாளாகும். www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
ரெயில்வே :
மத்திய ரெயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று சென்டர் பார் ரெயில்வே இன்பர்மேசன் சிஸ்டம்ஸ் (CRIS) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் சாப்ட்வேர் என்ஜினீயர் பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 22 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேசன், எம்.சி.ஏ., பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி www.cris.org.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்டு 7-ந் தேதியாகும்.
எஸ்.பி.ஏ. :
பள்ளி திட்டம் மற்றும் கட்டுமான கழகம் சுருக்கமாக எஸ்.பி.ஏ. எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் வருகை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிக்கு 45 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை www.spa.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூலை 27 ஆகஸ்டு 2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில், வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்.ஐ.டி. :
புதுச்சேரியில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி நூலகர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சூப்பிரண்டென்ட், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயர், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரங்களை http://www.nitpy.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
வன ஆராய்ச்சி மையம்:
வெப்பமண்டல வனகாடுகள் ஆராய்ச்சி மையம் (டி.எப்.ஆர்.ஐ.) மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் டெக்னிக்கல் அசிஸ் டன்ட், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன் உள்ளிட்ட பணி களுக்கு 36 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10,12-ம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://tfri.icfre.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஆகஸ்டு 9-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
மின்நிறுவனம்:
தேசிய நீர்மின் நிறுவனமான என்.எச்.டி.சி. நிறுவனத்தின் மத்திய பிரதேச மாநிலம் நர்மதா நகர் கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 21-8-19-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
சமீர் :
சமூக பயன்பாட்டிற்கான நுண்ணலை எலக்ட்ரானிக் கருவிகளை உருவாக்கும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக சமீர் (SAMEER) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்காக விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், சிவில் என்ஜினீயர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 30 முதல், ஆகஸ்டு 1 வரை நடைபெறும் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.sameer.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story