நிலக்கரி நிறுவனத்தில் படிப்புடன் பயிற்சிப்பணி
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படிப்புடன் பயிற்சிப் பணியிடங்கள் வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. என அழைக்கப்படும் பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான இதில் தொழில் பழகுனர் சட்டத்தின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள், பயிற்சி பெற்று கல்விச் சான்றிதழுடன் வெளிவரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. படிக்கும் காலத்தில் பணியும், அதற்கான ஊதியமும் பெற முடிவது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது இந்த ஆண்டில் 85 பேரை சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை சமீபத்தில் படித்து முடித்தவர்களுக்கான பயிற்சிப் பணிவாய்ப்பு களாகும்.
பிட்டர் -20 பேர், எலக்ட்ரீசியன் - 20 பேர், வெல்டர் 20 பேர், எம்.எல்.டி. பேதாலஜி - 15 பேர், எம்.எல்.டி. ரேடியாலஜி - 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் பயிற்சிப் படிப்பில் சேரலாம். இதில் வெல்டர் 15 மாத பயிற்சியாகும். மற்றவை 2 ஆண்டு பயிற்சி கொண்டதாகும்.
பிளஸ்-2 அறிவியல் பாடங்களை தேர்வு செய்து படித்தவர்கள் எம்.எல்.டி. பேதாலஜி, எம்.எல்.டி. ரேடியாலஜி பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு 1-6-2019-ந் தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். முன்பு பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்போது பயிற்சியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விருப்பம் உள்ளவர்கள் www.nlcindia.com இணையம் சென்று விண்ணப்பத்தை ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த படிவத்துடன் தேவையான சான்றுகள் இணைத்து, பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803. என்ற முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் ஆகஸ்டு 12-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப் படுபவர்களின் பட்டியல் ஆகஸ்டு 14-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். தகுதி உள்ளவர்கள் ஆகஸ்டு 19-ல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் ஆகஸ்டு 22-ல் வெளியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story