ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம்


ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம்
x
தினத்தந்தி 29 July 2019 4:55 PM IST (Updated: 29 July 2019 4:55 PM IST)
t-max-icont-min-icon

ஏர்இந்தியாவின் துணை நிறுவனம், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் பல்வேறு கிளைகளில் ஏராளமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குஜராத் மாநில விமான நிலையங்களில் டியூட்டி ஆபீசர் (டெர்மினல்), ஜூனியர் எக்சிகியூட்டிவ், கஸ்டமர் ஏஜெண்ட், ராம்ப் சர்வீஸ் ஏஜெண்ட், யூடிலிட்டி ஏஜெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 149 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

பட்டதாரிகள், ஐ.டி.ஐ., 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள் என பலதரப்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணி உள்ளது.

இந்த பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆகஸ்டு 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நேர்காணல் நடக்கிறது. எந்த பணிக்கு என்ன கல்வித்தகுதி, வயது வரம்பு தேவை என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்துவி்ட்டு அந்த பணிக்கான நேர்காணல் தேதியில் நேரில் செல்ல வேண்டும். நிரப்பிய விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அசல்- நகல் சான்றுகளை உடன் எடுத்துச் செல்வது அவசியம்.

இதேபோல தெற்கு மண்டலத்தில் உள்ள கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் டியூட்டி ஆபீசர் -டெர்மினல், ஜூனியர் எக்சி கியூட்டிவ், கஸ்டமர் ஏஜெண்ட், ராம்ப் சர்வீஸ் ஏஜெண்ட், யூடிலிட்டி ஏஜெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 187 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஹேண்டிமேன்-ஹேண்டி உமன் பணிக்கு 114 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன. ஹேண்டிமேன்-உமன் பணிகளுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அலுவலக பணியிடங்களிலும், 50 வயதுடையவர்களுக்கு அதிகாரி பணியிடங்களிலும் வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். ஆகஸ்டு 4 மற்றும் 5-ந்தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story