பேச்சு - கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்


பேச்சு - கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 29 July 2019 10:30 PM GMT (Updated: 29 July 2019 7:03 PM GMT)

பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 347 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சான்றிதழ்

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை என்ற தலைப்பில் மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, வினா-விடை உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

விலையில்லா தையல் எந்திரங்கள்

பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயதீபன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஸ்ஷணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள்் கலந்து கொண்டனர்.

Next Story