கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று பொதுமக்கள் பயனடையலாம் - இணைப்பதிவாளர் மலர்விழி தகவல்


கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று பொதுமக்கள் பயனடையலாம் - இணைப்பதிவாளர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 30 July 2019 3:45 AM IST (Updated: 30 July 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று பொதுமக்கள் பயனடையலாம் என்று இணைப்பதிவாளர் மலர்விழி தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளிலும் நபார்டு வங்கியுடன் இணைந்து மின்னணு பணப் பரிவர்த்தனை நிதிசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கோட்டக்குப்பம் கிளை வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மலர்விழி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சிகளால் ஏ.டி.எம். அட்டைகள், செல்லிட வங்கி சேவை, தேசிய மின்னணு பணப்பரிவர்த்தனை, நடப்பு நேர மொத்த தீர்வு போன்ற சேவைகளை விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் வழங்குவதையும், ஏ.டி.எம். கடவுச்சொற்கள் 4 இலக்க எண்களை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் தொலைபேசி மூலம் போலியான நபர்கள் வங்கியில் இருந்து பேசி ஏ.டி.எம். கார்டு தொடர்பான விவரங்களை கோரினால் அளிக்கக்கூடாது.

மேலும் வைப்பு தொகைகளுக்கு அதிக வட்டி விகிதம் வழங்குவதால் கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்யுங்கள். மேலும் நகை கடன், வீடு அடமான கடன், வீடு கட்டும் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், உடல் ஊனமுற்றோர் கடன், சம்பள கடன், மகளிர்களுக்கான கடன், சிறுவணிக கடன் என அனைத்து விதமான கடன்களும் கூட்டுறவு வங்கியில் வழங்கி வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பெற்று பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள், சங்க செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story