விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

சாதி வெறி ஆணவப்படுகொலையை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். கட்சியின் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் செங்கோலன், கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், மண்டல அமைப்பு செயலாளர் கிட்டு, முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குமரன், கல்வி மற்றும் பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணை செயலாளர் ராசித் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாதி வெறி ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கட்சியின் பெரம்பலூர் (கிழக்கு) ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story