60 வயது பூர்த்தியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்
60 வயது பூர்த்தியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிராம கோவில் பூசாரிகள், அருள்வாக்கு அருள்வோர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் 60 வயது பூர்த்தியான அனைத்து பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூசாரிகள் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கி பூசாரிகளுக்கு நலவாரிய சலுகைகள் அனைத்தும் வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் பணிக்கொடை வழங்க இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே கிராம கோவில் பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட அருள்வாக்கு பேரவை அமைப்பாளர் செல்வி தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் எத்திராஜ் முன்னிலை வகித்தார். இணை அமைப்பாளர் சிவசெந்தில் வரவேற்றார்.
தஞ்சை, திருவாரூர், நாகை மண்டல அமைப்பாளர் பாவேந்தன் கலந்துகொண்டு பேசினார். இதில் கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் ரஜிஸ்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story