ரூர்பன் திட்டத்தில் ரூ.150 கோடியில் நல்லம்பல், படுதார்கொல்லை ஏரிகளை தூர்வார நடவடிக்கை - அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்
மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் நல்லம்பல், படுதார்கொல்லை ஏரிகளை தூர்வார அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு குளங்கள், கோவில், அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறன. அதன் ஒரு பகுதியாக, திருநள்ளாறு பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் சார்பில் குமாரக்குடி பகுதியில் உள்ள பண்ண வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணியை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமாரக்குடி வாய்க்கால் 3 கி.மீ, தூரம் தூர்வாரப்படும்போது 160 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். சேத்தூர் வாய்க்கால் 3.5 கி.மீ. தூரம் தூர்வாரப்படும்போது நூலாற்றில் இருந்து சேத்தூர், செல்லூர், கருக்கன்குடி வழியாக நெல்லி வாய்க்கால் சென்றடையும். இது இந்த பகுதி விவசாயிகளுக்கு பயனாக இருக்கும்.
மேலும் ஒவ்வொரு குளங்கள் தூர்வாரப்படும்போதும், தண்ணீர் உள்ளே வரும் வழி, வெளியேறும் வழி முறையாக தூர்வாரி, சீர்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலமே திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் நிதி மூலம் திருநள்ளாறில் பல குளங்கள் தூர்வாரப்படுகின்றது.
மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் நல்லம்பல் ஏரியை தூர்வாரி இந்த ஆண்டே தண்ணீர் சேமிக்கும் வகையில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது. திரு-பட்டினம் பகுதி படுதார்கொல்லை ஏரியையும் தூர்வார அரசு திட்டம் வகுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.
அரசின் நிதி நெருக்கடியான சூழலிலும் தனியார் பங்களிப்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடைபெறுகின்றது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story