ஒன்னகரை-முத்துக்காடு மலைப்பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
ஒன்னகரை-முத்துக்காடு மலைப்பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஒன்னகரை, முத்துக்காடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டு தற்போது நாங்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள அடி பம்பில் தான் தற்போது தண்ணீர் எடுத்து வருகிறோம். எனினும் அந்த நீர் போதுமானதாக இல்லை.
இதேபோல் முத்துக்காடு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்று கொடிக்கால் பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பெருந்துறை அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை எங்களை சாதி பெயர் சொல்லி தரக்குறைவாக திட்டி வருகிறார். மேலும் அவர் சிலரை அழைத்து கை, கால்களை அமுக்கிவிடவும் சொல்கிறார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எங்களை அழைத்து வேலை வாங்குகிறார். இதனால் எங்களால் முழுமையாக பாடத்தை கவனிக்க முடிவதில்லை. மேலும் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் தொடர்ச்சியாக பாடம் நடத்துவதில்லை’ என்று கூறி இருந்தனர்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘கொடுமுடி காவிரி ஆற்று நீரை, குடிநீராதாரமாக கொண்டு செயல்படும் காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம், இச்சிபாளையத்தில் பல ஆண்டாக செயல்படுகிறது. சுத்திகரிப்பு செய்த பின், உபரி நீர் வீணாக வெளியேற்றப்படுகிறது. இந்த உபரி நீரை, இச்சிப்பாளையம் ஊர் அருகே உள்ள குளம், கசிவு நீர் குட்டைகளுக்கு திருப்பி விட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு, சூரியம்பாளையம் அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சித்ரா என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நான் பெற்றோரை இழந்து எனது சகோதரியுடன் வசித்து வருகிறேன். எனக்கு காது கேட்காததாலும், வாய் பேச முடியாததாலும் என்னை யாரும் வேலைக்கு வைக்க தயங்குகிறார்கள். எனவே எனக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
சத்தி அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனது மகள் நந்தினிக்கு (வயது 9) நடக்க முடியாது. மேலும் மூளை வளர்ச்சியும் குறைவாக உள்ளது. எனவே அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 273 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சி.கதிரவன் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து, மின்சாரம் தாக்கி உயிர் இழந்த அந்தியூர் வட்டதை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மனைவி ரத்தினத்துக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். மேலும் 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story