பவானி அருகே அதிக அளவு புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல்: தார் கலவை தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகை
பவானி அருகே அதிக அளவு புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தார் கலவை கலக்கும் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி,
இந்த அலுவலகம் அருகே சாலை அமைப்பதற்கான தார் கலவை கலக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து தார், ஜல்லிக்கற்கள் கலவை செய்யப்பட்டு தார்ரோடு போடுவதற்கு லாரிகளில் ஏற்றிச்செல்லப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன் வரை தார் கலவைகள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் பவானி அருகே காலிங்கராயன்பாளையம், பெரியார் நகர், பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 11 மணி அளவில் தார் கலவை கலக்கும் தொழிற்சாலைக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென தொழிற்சாலையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், மேட்டுநாசுவம்பாளையம் வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘தார் கலவை கலக்கும் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவிலான புகை வெளியேறுகிறது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.
இதன்காரணமாக எங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. மேலும், சளி, இருமல் உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அந்த தொழிற்சாலையை மூட வேண்டும். இல்லையெனில் சுமார் 100 அடி உயரத்தில் புகை போக்கி அமைத்து, புகை மூட்டத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள் கூறுகையில், ‘தார் கலவை கலக்கும் தொழிற்சாலையின் ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் புகை போக்கி இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் அமைத்து புகை மூட்டத்தை குறைக்க வழிவகை செய்யப்படும்’ என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மதியம் 12 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story