காரமடை அருகே பரபரப்பு, கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கை துண்டிப்பு - அரிவாளுடன் தொழிலாளி போலீசில் சரண்


காரமடை அருகே பரபரப்பு, கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கை துண்டிப்பு - அரிவாளுடன் தொழிலாளி போலீசில் சரண்
x
தினத்தந்தி 30 July 2019 4:15 AM IST (Updated: 30 July 2019 5:31 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின்கையை துண்டித்ததொழிலாளி அரிவாளுடன் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ளசின்னதொட்டிப்பாளையம்,எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர்சுஜாதா (வயது 30). இவருடைய கணவர் பிரபு.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்மோதி பிரபுஇறந்துபோனார்.சுஜாதா குழந்தைகளுடன்தனியாக வசித்து வந்தார். மேட்டுப்பாளையத்தில்உள்ள தனியார்ஆஸ்பத்திரியில்சுஜாதா சுத்தம்செய்யும் தொழிலாளியாகவேலை செய்துவந்தார்.

இந்தநிலையில்காரமடையை சேர்ந்தகட்டிட தொழிலாளி தங்கராஜ்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம்கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.குடும்ப செலவுகளுக்குதங்கராஜ்பணம் கொடுத்து வந்தார்.

இந்தநிலையில்சுஜாதாவுக்குவேறு ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆத்திரம் அடைந்தார். நேற்று சுஜாதாவுக்கும், தங்கராஜிக்கும் இடையேஇதுதொடர்பாக தகராறுஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தங்கராஜ் அரிவாளால் சுஜாதாவின் இடது கையின்மணிக்கட்டு பகுதியில்ஓங்கிவெட்டி துண்டித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் சுஜாதாஅலறி துடித்தார். தங்கராஜ் அரிவாளுடன்காரமடை போலீசில்சரண் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து துண்டித்த கையை ஒருபாலித்தீன்பையில்வைத்து தனியார்ஆஸ்பத்திரியில் சுஜாதாவை சிகிச்சைக்காகஅனுமதித்தனர். துண்டித்த கையைஇணைப்பதற்காக சுஜாதா கோவைமேட்டுப்பாளையம் சாலையில்உள்ள கங்காஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குஅவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

Next Story