நெற்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது
நெற்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 18 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், சரஸ்வதி காலனி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் குற்றாலம் சென்று விட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து சங்கர் உடனே கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை சோதனை செய்தனர். அதில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 பவுன் நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, நகை திருடிய வழக்கில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கவியரசி (24), என்ற இளம்பெண்ணை கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் கைது செய்தார்.

Related Tags :
Next Story