மன்னார்குடி நகரில், ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மன்னார்குடி நகரில், ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 2019-07-30T23:57:11+05:30)

மன்னார்குடி நகரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மன்னார்குடி,

மன்னார்குடி நகரில், தஞ்சை சாலையில் உள்ள காளவாய்க்கரை முதல் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கீழப்பாலம் வரையிலும், கும்பகோணம் சாலையில் உள்ள மேலப்பாலம் முதல் மதுக்கூர் சாலை வரையிலும் நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

முன்னதாக இந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து நேற்று பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்ற பகுதிகளில் மன்னார்குடி போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story