திருவள்ளூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


திருவள்ளூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2019 9:45 PM GMT (Updated: 30 July 2019 6:42 PM GMT)

திருவள்ளூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பன்னூர் இருதயபுரம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் அமராவதி (வயது 28). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையை சேர்ந்த விஜயராஜ் (34) என்பவரை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கம் கொண்ட விஜயராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து கணவன், மனைவிக்கிடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அமராவதியும் கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.அவரது தாய் தந்தையர் அவருக்கு அறிவுரை சொல்லி மீண்டும் கணவரிடம் சேர்த்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த அமராவதி தன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை கண்ட அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அமராவதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story