சிறப்பு குறைதீர்க்கும் நாள் ஆய்வுக்கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது


சிறப்பு குறைதீர்க்கும் நாள் ஆய்வுக்கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 30 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-31T00:59:08+05:30)

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை ஆகியவை பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை ஆகியவை பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா திட்டம், மக்கள் தொடர்பு முகாம்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவற்றில் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன. இருப்பிலும் நீண்ட நாள் நிலுவையில் உள்ள பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் விதமாக, உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயின் தலைமையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் ஆய்வுக்கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடையார்பாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்குதல், “அ“ பதிவேடு கணினிமயமாக்கல் பணியின்போது ஏற்பட்டுள்ள தவறுகள், விடுதல்கள் தொடர்பான குறைகள், பட்டா மாறுதல், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவது தொடர்பான பல்வேறு குறைகள் (குறிப்பாக மாற்றுத்திறனாளி மனுதாரர்களின் குறைகள்), வாரிசு சான்று வழங்குவது தொடர்பான குறைகள், அம்மா திட்டம், முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றின் வாயிலாக அளித்த மனுக்கள் மற்றும் கோட்ட அளவில் உள்ள பிற குறைதீர்வு மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story