நெல்லை மாவட்டத்தில் மருத்துவமனை தின விழா கொண்டாட்டம்


நெல்லை மாவட்டத்தில்  மருத்துவமனை தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 31 July 2019 3:30 AM IST (Updated: 31 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மருத்துவமனை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அம்பை, 

நெல்லை மாவட்டத்தில் மருத்துவமனை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை தின விழா

நெல்லை மாவட்டம் அம்பை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தினவிழா கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவர் வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், சார்நிலை கருவூல அலுவலர் குமார் பாண்டியன், ஓய்வுபெற்ற சித்த மருத்துவ அலுவலர் லட்சுமி நாராயணன், உதவி சித்த மருத்துவர் உலகநாயகி ஆகியோர் வாழ்த்தி பேசினர். செவிலியர் பேபி சிவகுமாரி மருத்துவமனையின் ஆண்டறிக்கை வாசித்தார். அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பஸ்நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் விஜயபாலாஜி, அ.தி.மு.க. நிர்வாகி முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த விழாவுக்கு, டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பொதுப்பணித்துறை அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை சிறப்பு நிலை ஆய்வக நுட்பனர் ஹரிஹர நாராயணன் வரவேற்றார். விழாவில் நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடேசன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தமிழரசன் மற்றும் மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பாவூர்சத்திரம், அரியப்பபுரம், மாடியனூர், கரும்பனூர், சுரண்டை ஆகிய ஊர்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நளினி ஆலோசனைப்படி மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் அந்தந்த பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் ராஜ்குமார், கீர்த்திகா மற்றும் சுகாதார செவிலியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பணகுடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. வள்ளியூர் வட்டாரத்தில் உள்ள பணகுடி, வடக்கன்குளம், துலுக்கர்பட்டி, சங்கனாபுரம், பழவூர், செட்டிகுளம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்தின. இந்த வட்டாரத்தில் சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்ட பணகுடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கேடயத்தை நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் மணிவர்ன பெருமாள், பாஸ்கர், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமலிங்கம் செய்து இருந்தார்.

Next Story