தமிழ் ஆசிரியரை நியமிக்கக்கோரி அன்னை சிவகாமி பள்ளி மாணவிகள் மறியல்
தமிழ் ஆசிரியரை நியமிக்கக்கோரி அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி முதலியார்பேட்டை பிராமினாள் ரோட்டில் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் கடந்த 2 மாதங்களாக 11-ம் வகுப்பிற்கு தமிழ் ஆசிரியர் இல்லை. இந்த பள்ளியில் மாதத்தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அது குறித்து அந்த பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் இதுவரை தமிழ் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை வகுப்புகள் முடிவடைந்த உடன் பள்ளியின் நுழைவாயிலின் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தமிழ் ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்கள், மினிவேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது தடை பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலியார்பேட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளிக்க நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். உங்கள் கோரிக்கைகளை கல்வித்துறையிடம் எடுத்து கூறலாம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story