விவசாயிகளின் தேவைகளை பூர்த்திசெய்ய வேளாண்துறை தயார் - அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு


விவசாயிகளின் தேவைகளை பூர்த்திசெய்ய வேளாண்துறை தயார் - அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 31 July 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் தேவை களை பூர்த்திசெய்ய வேளாண்துறை தயா ராக உள்ளது என்று அமைச்சர் கமலக் கண்ணன் கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் வேளாண்மையை மேம்படுத்து வது தொடர்பாக விவசாயிகள், வேளாண் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் விக்ராந்த் ராஜா, கூடுதல் வேளாண் இயக்குனர் முகமது தாசிர், வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், காரைக்காலுக்கு காவிரி நீரை உரிய காலத்தில் பெற்று தர வேண்டும். பாசிக் நிறு வனத்தை செம்மையாக செயல்படுத்துதல், வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையத்தில் தரமான விதை நெல் போதிய அளவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்று கூறினர்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-

காரைக்காலில் நெல் அல்லாத மாற்றுப்பயிர் திட்டத்துக்கான ஆலோசனை, பயிற்சிகளும் அரசு துறை களால் வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண்துறை தயாராக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மலர், காய்கனி கண்காட்சி நடத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த லாம்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 5 ஆயிரம் ஹெக்டேர் வரை சாகுபடி நடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தேவையான விதைநெல் 250 டன் கையிருப்பில் வைக்கு மாறு அரசு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள் தற்போதைய பருவத்தில் என்னென்ன ரகத்தை பயிரிடலாம் என்பது குறித்து வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பரிந்துரையின்படி மாவட்ட நிர்வாகம் விரைவில் அறிவிக்கும். அதனை பின்பற்றி விவசாயிகள் பயிர் செய்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story