திருவள்ளுவர் சிலை திறப்பு 10-வது ஆண்டு விழா முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அழைப்பு பெங்களூருவில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது
பெங்களூருவில் வருகிற 11-ந்தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு 10-வது ஆண்டு விழா நடக்கிறது. இதில் கலந்துகொள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் வருகிற 11-ந்தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு 10-வது ஆண்டு விழா நடக்கிறது. இதில் கலந்துகொள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
10 ஆண்டு விழா
பெங்களூரு அல்சூர் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த இந்த சிலையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்களின் பெரு முயற்சியால் திறக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது கர்நாடக வாழ் தமிழர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிலை திறந்து 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி கர்நாடக வாழ் தமிழர்கள் ஒன்று கூடி விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக எஸ்.டி.குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவின் கூட்டத்தில், திருவள்ளுவர் சிலை திறப்பின் 10-வது ஆண்டு விழாவை வருகிற 11-ந்தேதி கர்நாடக- தமிழர் திருநாளாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப் பட்டது.
எடியூரப்பாவுக்கு அழைப்பு
இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து எஸ்.டி.குமார் தலைமையிலான குழுவினர் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பினை ஏற்ற முதல்-மந்திரி எடியூரப்பா, விழாவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார்.
இதுகுறித்து எஸ்.டி.குமார் கூறுகையில், “கர்நாடகத்தில் வாழும் அனைத்து தரப்பு தமிழர்களும் ஒருங்கிணைந்து திருவள்ளுவர் சிலை திறப்பின் 10-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து அழைப்பு விடுத்தபோது ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் புண்ணிய மூர்த்தி, சாந்தகுமார், கோபாலகிருஷ்ணன், தேனிரா உதயகுமார், செந்தில் குமார், கட்டா சுப்பிரமணி நாயுடு, பாரி, அன்புவேல், வேடியப்பன், ரவிக்குமார், சேரன், பூங்காவனம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story