பஸ் மோதி பலியான கார் டிரைவர் குடும்பத்திற்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு; தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு


பஸ் மோதி பலியான கார் டிரைவர் குடும்பத்திற்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு; தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2019 3:30 AM IST (Updated: 31 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதி பலியான கார் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்ட ஈடு வழங்க தேவகோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேவகோட்டை,

தேவகோட்டை நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சரவணன் (வயது 35). கார் டிரைவரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தேவகோட்டை சிவன் கோவில் அருகே அவர் வரும் போது தேவகோட்டையில் இருந்து திருவாடானை நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், விபத்தில் பலியான சரவணன் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 800 இழப்பீட்டை 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story