போக்குவரத்து சிக்னல்களில் காற்றின் மாசு குறித்து ஆய்வு


போக்குவரத்து சிக்னல்களில் காற்றின் மாசு குறித்து ஆய்வு
x
தினத்தந்தி 31 July 2019 3:30 AM IST (Updated: 31 July 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

புதுவை போக்குவரத்து சிக்னல்களில் காற்றின் மாசு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வார இறுதிநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையினால் சுற்றுச்சூழலும் மாசு ஏற்படுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்றில் நச்சுத்தன்மை பரவி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்யும் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசு தொடர்பாக, தனியார் நிறுவனம் ஒன்று ஜிப்மர் உதவியுடன் புதுவையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் கருவிகளை போக்குவரத்து சிக்னல்களில் நின்று பணியாற்றும் போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் முருகையன் வழங்கினார். அந்த கருவியை அவர் சுமார் 1½ மணி நேரம் வைத்திருப்பார். அப்போது அந்த இடத்தில் உள்ள காற்றின் மாசு மற்றும் அந்த போலீஸ்காரர் சுவாசிக்கும் காற்று மாசின் அளவு முழுமையாக அந்த கருவியில் பதிவாகும்.

இந்த ஆய்வு புதுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதைக்கொண்டு போக்குவரத்து போலீசார் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசின் அளவு, அதனால் ஏற்படும் விளைவுகள், அதனை சரி செய்வது எப்படி என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Next Story