மது விருந்தில் மோதல்: தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது ஒருவர் கை முறிந்தது
திருச்சிற்றம்பலம் அருகே மதுவிருந்தில் ஏற்பட்ட மோதலில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது அவரது கை முறிந்தது.
வானூர்,
புதுவை உழவர்கரையை சேர்ந்தவர் சந்துரு (வயது 20), கேட்டரிங் கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் தனது பிறந்த நாளையொட்டி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தார்.
இதில் கலந்துகொண்ட ஹரேஷ் மற்றும் விஜய் ஆகியோருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது விஜய் தனக்கு தெரிந்த 2 ரவுடிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். பின்னர் விஜய் மற்றும் அவரது ரவுடி கூட்டாளிகளுடன் சேர்ந்து ஹரேசை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். வெட்டுக்காயம் அடைந்த ஹரேஷ் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இந்த மோதல் தொடர்பாக வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர் சந்துரு, ரவுடிகள் புதுச்சேரி திலாசுபேட்டையை சேர்ந்த கிஷோர் (22), சாந்தகுமார் (21), முத்திரையர்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (20) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த உழவர்கரை விஜய் (20), மூலக்குளத்தை சேர்ந்த ஹரிஷ் (19) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவக்கரை ஆற்றுப்பகுதி மற்றும் பூத்துறை முந்திரிதோப்பில் பதுங்கியிருந்த விஜய், ஹரிசை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் இருவரும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். விஜயை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story