அரிக்கன்மேடு மேம்பாடு குறித்து ஆலோசனை


அரிக்கன்மேடு மேம்பாடு குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 31 July 2019 4:00 AM IST (Updated: 31 July 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

வரலாற்று சின்னமாக விளங்கும் அரிக்கன்மேடு பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக துணை கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை அரிக்கன்மேடு வரலாற்று சிறப்பு மிக்க இடமாக உள்ளது. தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு மணல் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக வாகனங்கள் செல்லும் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகளை தோண்டி காவல்துறையினர் துண்டித்தனர். இருந்தபோதிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கலெக்டர் அருண் தலைமையில் அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வும் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் அரிக்கன்மேடு பகுதியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் துணை கலெக்டர் சுதாகர் தலைமையில் சாரம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, கலை பண்பாட்டுத்துறை கண்காணிப்பாளர் கலியபெருமாள், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் தொல்பொருள் துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிக்கன்மேட்டை பாதுகாப்பது, சுற்றுலா தலமாக மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Next Story