ஓசூரில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2019 4:43 AM IST (Updated: 31 July 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்,

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சிகர் பாண்ட் எ்ன்ற கிராமத்தை சேர்ந்த பாதல் சித்ராதர் என்பவரது மகன் அஜித் சித்ராதர்(வயது 22). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மேலும் அருகேயுள்ள பேடரபள்ளி ராஜாஜி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

அஜித் சித்ராதர், தனது சொந்த கிராமத்தில் ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 22 -ந் தேதி, அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும், அன்று முதலே அவர் விரக்தியுடனும், மனமுடைந்தும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித் சித்ராதரின் உறவினர் அமர்ராய் என்பவர், அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு மின்விசிறியில் நைலான் கயிற்றால் அஜித் சித்ராதர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், அஜித் சித்ராதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story