ராசிபுரம் அருகே நீர்நிலை புறம்போக்கு ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராசிபுரம் அருகே நீர்நிலை புறம்போக்கு ஓடை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
ராசிபுரம்,
ராசிபுரம் தாலுகா, சிங்களாந்தபுரம் கிராமம், போடி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1 கி.மீ. தூரத்திற்கு நீர்நிலை புறம்போக்கு ஓடை இருந்தது. இந்த ஓடை ஓணான்கரடு அருகில் உள்ளது. மழை காலங்களில் இந்த ஓடை வழியாக தண்ணீர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. 1 கி.மீ. தூரம் கொண்ட இந்த நீர்நிலை புறம்போக்கு ஓடையை அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து தங்களது விவசாய நிலங்களுடன் இணைத்து சமப்படுத்திக்கொண்டனர். கடந்த 50 வருடங்களாக இந்த ஓடையை அவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் ஓடை இருந்த சுவடே தெரியாமல் போனது. மழைக்காலங்களில் இந்த ஓடை வழியாக மழைநீர் செல்ல முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் வந்தது. இதையொட்டி கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓடை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் தெரிவித்த ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பை கைவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓடையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அப்புறப்படுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது, துணை தாசில்தார் சீனிவாசன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) ஜெயக்குமார், வருவாய்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், சிங்களாந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் ஈடுபட்டனர். 50 வருடங்களாக ஓடையில் ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றிய சம்பவம் விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் நீர்நிலை ஓடை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இன்று (புதன்கிழமை) இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story