வானவில் : 3 பணிகளை செய்யும் வயர்லெஸ் கிளனர்
பொதுவாக வாக்குவம் கிளனர்கள் தரையில் உள்ள தூசுகளை மட்டும் உறிஞ்சும். அதிக வேகத்தில் காற்றை வெளியேற்றி தூசுகளை வெளியேற்றும்.
ஜியோமி நிறுவனம் மூன்று விதமான பணிகளைச் செய்யும் வாக்குவம் கிளனரை அறிமுகம் செய்துள்ளது. இது தரையை துடைக்கும், தூசுகளை உறிஞ்சும், தண்ணீர்போட்டு (மாப்) துடைக்கவும் இதை பயன்படுத்தலாம். வயர்லெஸ் முறையில் இது செயல்படுவது கூடுதல் சிறப்பாகும். இதன் வடிவமைப்பே மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. மூன்று விதமான செயல்பாடுகளையும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நுண் துகள்களையும் உறிஞ்சும். இதன் முன்பகுதியில் தண்ணீரை நிரப்புவதற்கு டேங்க் உள்ளது. தண்ணீரை ஊற்றி துடைக்கவும் (மாப்) இதனால் முடியும். வயர் இணைப்பு தேவைப்படாததால் இதை அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று சுத்தம் செய்யலாம். 2 பிரஷ்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story