மொபைல் களம்
ஆரம்பத்தில் நோக்கியா நிறுவனம் தயாரித்து அளித்த அடிப்படை மாடல் செல்போன் மீது பலருக்கும் விருப்பம் அதிகம்.
4ஜி செயல்பாடு கொண்ட நோக்கியா 220
நோக்கியா நிறுவனத் தயாரிப்புகளில் பலவித சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டாலும், ஆரம்பத்தில் அந்நிறுவனம் தயாரித்து அளித்த அடிப்படை மாடல் செல்போன் மீது பலருக்கும் விருப்பம் அதிகம். இதனாலேயே பேஸ் மாடல் செல்போன்களுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியுள்ளது இந்நிறுவனம். தற்போது 4ஜி இணைப்புகளில் செயல்படக் கூடிய நோக்கியா 220, நோக்கியா 105 மாடல் செல்போன்களை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 105 ஸ்போர்ட்ஸ் செல்போன் மேல் பகுதி பாலி கார்பனேட்டால் ஆனது. இது மூன்று வண்ணங்களில் வந்துள்ளது. இதில் நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம் உள்ளது. நோக்கியா 220 மாடல் 4ஜி இணைப்பில் செயல்படும்.
2013-ம் ஆண்டு நோக்கியா 105 வெளியிடப்பட்டது. அடுத்ததாக 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள இது 1.45 டி.எப்.டி. திரையைக் கொண்டது. இதில் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. பேட்டரி 35 நாட்களுக்கு நிலைத்திருக்கும். இந்த வரிசையில் இது நான்காம் தலைமுறை போனாகும்.
இதேபோல நோக்கியா 220 மாடல் முன்பு 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவும் 4ஜி தொலைத் தொடர்பு இணைப்பில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 105 மாடல் விலை ரூ.1,000 ஆகும். இது நீலம், கருப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். நோக்கியா 220 மாடல் நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.3 ஆயிரமாகும். இதில் 2.4 அங்குல திரை உள்ளது. இதில் மைக்ரோ யு.எஸ்.பி. 2.0 போர்ட் உள்ளது. இரண்டு சிம் கார்டுகள் (நானோ) போடும் வசதி உள்ளது. புளூடூத் 4.2, வி.ஜி.ஏ. கேமராவுடன், எப்.எம் ரேடியோ வசதியையும் கொண்டுள்ளது. நீண்ட நேரம் செயல்பட 1,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி உதவியாக உள்ளது. செல்போன் பேசுவதற்கு மட்டும் போதும் என்பவர்களின் நம்பகமான தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.
ஹூவாய் நோவா 5 - ஐ புரோ
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் நோவா 5- ஐ புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 மெகாபிக்ஸெல் செல்பி கேமரா உள்ளது. இதில் 48 மெகாபிக்ஸெல் கேமரா துல்லியமாக படம் பிடிக்க உதவுகிறது. விரல் ரேகை பதிவு வசதி ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் உள்ளது. பச்சை நிறத்திலான வழவழப்பான பேனல் பின்பகுதியில் உள்ளது. இதில் 2.3 கிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் எஸ்.ஓ.சி. பிராஸசர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக வசதியை விரிவாக்கம் செய்ய மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. 6.26 அங்குல திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் உள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் தன்மையோடு 3,900 எம்.ஏ.ஹெச். பேட்டரி நீடித்த செயல்பாட்டை அளிப்பதாக உள்ளது. இதன் பின்பகுதியில் முதலாவது கேமரா 48 மெகா பிக்ஸெல்லுடனும், இரண்டாவது கேமரா 8 மெகா பிக்ஸெல்லுடனும், 2 மெகா பிக்ஸெல் இமேஜ் சென்சாருடன் 3-வது கேமராவும் உள்ளது. இதன் செல்பி கேமரா 32 மெகா பிக்ஸெல்லைக் கொண்டிருப்பது செல்பி பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சர்வதேச அளவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ80
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் புதியதாக கேலக்ஸி ஏ சீரிஸில் இணைந்துள்ளது ஏ80 மாடல் ஸ்மார்ட்போன். பிரீமியம் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது கேலக்ஸி ஏ80 மாடல் ஸ்மார்ட்போன். இதில் பின்புறம் 3 கேமராக்கள் உள்ளன. இதன் தொடு திரை சூப்பர் அமோலெட் டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 ஜி.எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இதன் விலை ரூ.47,990 ஆகும். இது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டது.
ஏஞ்சல் கோல்டு, கோஸ்ட் ஒயிட், பான்டம் பிளாக் ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கும். 2 சிம் (நானோ) போடும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு பை இயங்கு தளம் கொண்டது. இதில் சுழலும் கேமரா வசதி உள்ளது. முதன்மை கேமரா 48 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது கேமரா 8 மெகா பிக்ஸெல்லும், 3-வது கேமரா வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டதாக வந்துள்ளது.
பின்புறம் உள்ள கேமராக்களே முன்புறம் சுழன்று செல்பி கேமராவாகவும் செயல்படும். இத்தகைய நுட்பம் முதல் முறையாக இந்த ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3,700 எம்.ஏ.ஹெச். பேட்டரி 25 வாட் விரைவாக சார்ஜிங் செய்யும் வசதியோடு வந்துள்ளது.
Related Tags :
Next Story