சோளிங்கர் அருகே கிணற்றில் ஆண் பிணம்
சோளிங்கர் அருகே கிணற்றில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்,
சோளிங்கர் அருகே உள்ள நீலகண்டராயன்பேட்டையில் பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் நவநீதனிடம் தெரிவித்தனர். அவர் சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் காட்டரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 65) என்பதும், பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 10 நாட்கள் ஆகி இருக்கும் என்பதும் தெரிய வந்தது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்துவிட்டு கிணற்றில் பிணத்தை வீசி விட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story