சாராயம் குடிக்க மறுத்த முதியவரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது


சாராயம் குடிக்க மறுத்த முதியவரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2019 3:45 AM IST (Updated: 1 Aug 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் குடிக்க மறுத்த முதியவரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அரசு (வயது 65). முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனிவண்ணன் (25). நேற்று முன்தினம் கனிவண்ணன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அகரகீரங்குடி பகுதியில் சாராயம் வாங்கி உள்ளார். பின்னர் அவர்கள், சாராயத்தை எடுத்து கொண்டு அகரகீரங்குடி மஞ்சளாற்றங்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த அரசுவிடம் தாங்கள் கொண்டு வந்த சாராயத்தை குடிக்க சொல்லி வற்புறுத்தினர். அதற்கு அவர் மறுத்துள்ளார். அதனை கேட்காமல் அவர்கள், அரசுவை சாராயத்தை குடிக்க சொல்லி மிரட்டினர். இதனால் கனிவண்ணன் உள்பட 5 பேருக்கும், அரசுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கனிவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பீர்பாட்டிலை எடுத்து முதியவர் அரசுவின் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த முதியவர் அரசு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனிவண்ணன், அவரது நண்பர்கள் முட்டம் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் சரவணகுமார் (25), கலியமூர்த்தி மகன் கார்த்தி (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக கருணாநிதி மகன் ஆனந்தகுமார், சிவாஜி மகன் ஜெகதீஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். 

Next Story