காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக பிரிப்பு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் தேதி மாற்றம்


காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக பிரிப்பு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் தேதி மாற்றம்
x
தினத்தந்தி 31 July 2019 10:45 PM GMT (Updated: 31 July 2019 8:55 PM GMT)

காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக பிரிப்பதற்கான பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாக வசதிக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பாக, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மற்றும் 6–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இது 19–ந்தேதி (திங்கட்கிழமை) மற்றும் 20–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், காஞ்சீபுரம் மற்றும் மதுராந்தகம் வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் மற்றும் பிற அமைப்பினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

மேலும், செங்கல்பட்டு வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருகிற 6–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் 20–ந்தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்பினர் மற்றும் பிற அமைப்பினரிடம் கருத்து கேட்கப்படும்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story