திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு; சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்று வேண்டுகோள்


திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு; சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்று வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Aug 2019 4:30 AM IST (Updated: 1 Aug 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி மீனவ கிராமத்தில், 6 ஆயிரத்து 111 ஏக்கர் பரப்பளவில் அதானி குழுமம் துறைமுகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான ஆயத்தப்பணிகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

காட்டுப்பள்ளியில் துறைமுகம் அமைக்கப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் கருதுகிறார்கள். எனவே துறைமுகம் அமைப்பதற்கு காட்டுப்பள்ளி, பழவேற்காடு, லைட் ஹவுஸ், ஊர்னாமேடு, செங்கெனிமேடு, காட்டூர் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக எண்ணூர் முகத்துவாரம் காப்போம் இயக்கம் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், கட்டுமான கலை ஆசிரியர் சுதிர் மற்றும் மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள், அதானி துறைமுகத்தால் ஏற்படும் தீமைகள், விளைவுகள் குறித்து நிருபர்களிடம் விளக் கினர்.

ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறியதாவது:-

அதானி குழுமம் துறைமுகம் அமைப்பதற்காக 2 ஆயிரம் ஏக்கர் மணல் நிரப்பி கடலை நிலமாக்க மாற்ற உள்ளது. ஆறு, ஏரி, குளம், குட்டைகள், ஓடைகள் ஆகியவற்றை அழித்து துறைமுகத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இப்பகுதியில் மீனவர்கள், விவசாயிகள் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் அதானி குழுமம், இந்த இடம் வசிப்பதற்கு தகுதியில்லாத பொட்டல் காடு என்று பொய்யான கருத்தை கூறி சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

எந்த நகரத்திலும் இல்லாத வகையில் சென்னையில் 3 துறைமுகங்கள் இருக்கிறது. எனவே இயற்கையை அழித்து கூடுதல் துறைமுகம் தேவை இல்லை. துறைமுகம் அமைக் கப்பட்டால் மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி விடும். எனவே இப்பகுதியில் துறைமுகம் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story