3-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


3-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 4:25 AM IST (Updated: 1 Aug 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 3-வது மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலைக்கு முயன்றார். கை, கால்கள் முறிந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை வைத்தியநாதன் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 18). இவர் நேரு வீதியில் உள்ள சூப்பர் ஸ்டார் என்ற பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் அவர் கடைக்கு வேலைக்கு வந்துள்ளார். பின்னர் கடையில் வேலை பார்க்கும் சக தோழியுடன் பாத்ரூமுக்கு செல்ல மாடிக்கு சென்றுள்ளார்.

தோழி கீழே திரும்பிய நிலையில் விக்னேஷ்வரி மட்டும் கீழே வராமல் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். இந்த சம்பவத்தில் இடது கை, வலது கால் எலும்புகள் முறிந்தன. இடுப்பிலும் கடுமையான காயம் ஏற்பட்டது.

இதனால் அலறி துடித்த அவரை சக ஊழியர்களும், அந்த வழியாக சென்றவர்களும் மீட்டு உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்னேஷ்வரி தற்கொலை செய்யும் நோக்கத்துடன் மாடியில் இருந்து குதித்ததாக தெரிகிறது. அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பெரியகடை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story