சேலத்தில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
சேலத்தில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
சேலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அங்குள்ள ஒரு புத்தக கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (வயது 15). இவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சில நாட்களாக மாணவன் சஞ்சய் பள்ளிக்கு செல்லாமல் இருந்து உள்ளான். இதனால், பெற்றோர் தினமும் தவறாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மகனுக்கு அறிவுரை கூறி உள்ளனர். ஆனால் அவன் அதை கேட்காமல் இருந்து வந்து உள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அனைவரும் தூங்க சென்றனர். அப்போது சஞ்சய் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினான்.
இதை பார்த்த பெற்றோர் பதறியடித்துக்கொண்டு மகனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது டாக்டர்கள் மாணவனை பரிசோதித்த போது அவன் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது. மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதாக, தெரிவித்தனர். தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story