குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 2 Aug 2019 4:15 AM IST (Updated: 2 Aug 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு குஜிலியம் பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.கூடலூர் கிராம மக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை ஒன்றியம், தி.கூடலூ ரில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக தி.கூடலூர் ஊராட்சி சார்பில், ஆழ்துளை கிணறு அமைக்கப் பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட் டது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. இந்நிலையில் தி.கூட லூருக்கு அருகே உள்ள கணபதிநகரில் இருக்கும் ஆழ் துளை கிணற்றிலிருந்து குடிநீர் வினி யோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீரும் பொதுமக்களுக்கு போதுமான தாக இல்லை. இதன் காரணமாக கிராம மக்கள் குடிநீர் இன்றி, கடந்த 4 மாதங் களுக்கும் மேலாக அவதியடைந்து வந்தனர். இதனால் கணபதி நகரில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகை யில், தி.கூடலூர், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் கூடுதலாக அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறினர்.

இந்த நிலையில் அங்கு வந்த குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து குமரனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்த னர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் குடிநீர் பிரச் சினைக்கு விரைந்து நட வடிக்கை எடுக்கப்படும் என் றார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்ற னர். இந்த முற்றுகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story