கார் மோதி ஆசிரியை பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை


கார் மோதி ஆசிரியை பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 3 Aug 2019 4:15 AM IST (Updated: 2 Aug 2019 10:12 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி ஆசிரியை பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரியில் சேலம் சாலையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மஞ்சுலட்சுமி (வயது 34). இவர் சுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி பள்ளியில் இருந்து தனது மொபட்டில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்டம்பட்டி பகுதியில் கிருஷ்ணகிரிக்கு வர திரும்பினார்.

அப்போது சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சுலட்சுமி பரிதாபமாக பலியானார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கோவை மாவட்டம் குறிஞ்சி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (44) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், கார் டிரைவரான பாலமுருகனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Next Story