லாலாபேட்டை அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி 13 பேர் காயம் போலீசார் விசாரணை


லாலாபேட்டை அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி 13 பேர் காயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Aug 2019 3:45 AM IST (Updated: 3 Aug 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி 13 பேர் காய மடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாலாபேட்டை, 

கரூர் மாவட்டம், லாலாபேட்டையை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 50). இவரது மகள் அம்முவிற்கு திருமணமாகி குழந்தை இல்லாததால், நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையொட்டி குடும்பத்தினருடன் லாலாபேட்டை அருகே உள்ள லெட்சுமணப்பட்டி பாம்பலாயி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதற்கு முடிவு செய்தார். அதன்படி ஒரு சரக்கு வேனில் நாகேந்திரன், அவரது மனைவி ஹேமா (42), மகள் அம்மு மற்றும் உறவினர்கள் 10 பேர் என மொத்தம் 13 பேர் லாலாபேட்டையில் இருந்து லெட்சுமணப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேன் பழைய ஜெயங்கொண்டம் அருகே உள்ள கே.புதுப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் சரக்கு வேனில் பய ணம் செய்த நாகேந்திரன், அவரது மனைவி ஹேமா, மகள் அம்மு, நாகேந்திரன் உறவினர்கள் சிந்துஜா (21), புஷ்பராணி (65), ரேணுகா (55), மேனகா(50), பாபு(39), சரஸ்வதி (48), நாகவேணி(22) சென்னையை சேர்ந்த மற்றொரு சிந்துஜா (23), சரக்கு வேன் டிரைவர் கண்ணன் (55), சமையல்காரர் செல்வம்(50) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம் பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த நாகேந்திரனை மட்டும் மேல்சிகிச்சைக் காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story