மாணவர்கள், பெற்றோர்களிடம் பணம் வசூல்: அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
மாணவர்கள், பெற்றோர்களிடம் பணம் வசூலித்ததால் விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார்.
ஆரணி,
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தேவராஜ். இவர் இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் பள்ளி பராமரிப்பு செலவு என ரூ.200 முதல் ரூ.300 வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனை வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தலைமை ஆசிரியர் தேவராஜ் மாணவர்கள், பெற்றோர்களிடம் பணம் வசூலித்தது தெரிய வந்தது.
இதையடுத்து தலைமை ஆசிரியர் தேவராஜை பணியிடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவு நகலை ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத், பள்ளி ஆய்வாளர் பாபு ஆகியோர் தேவராஜிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story