மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி அருகேபெண்ணிடம் நகை பறிப்புமர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Near Vikravandi Jewelry to the woman Police web site to Marmanabar

விக்கிரவாண்டி அருகேபெண்ணிடம் நகை பறிப்புமர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகேபெண்ணிடம் நகை பறிப்புமர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60), விவசாயி. இவருடைய மனைவி சுகுணா (56). இவர் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்து, தனது வீட்டின் பின்பக்க கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.

அப்போது தனது பின்னால் யாரோ வருவதை உணர்ந்த சுகுணா, யார் என்று கேட்டபடி மின் விளக்கை போட்டார். அந்த சமயத்தில் மர்மநபர் ஒருவர், திடீரென சுகுணாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார்.

இதில் பதறிய அவர் உடனே திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அவரது கணவர் ராமமூர்த்தி மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமநத்தம் அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
ராமநத்தம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. திண்டிவனம் அருகே பட்டப்பகலில் துணிகரம், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு
திண்டிவனம் அருகே பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. மயிலம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
மயிலம் அருகே பட்டப்பகலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. கள்ளக்குறிச்சி அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.