சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாந்தராஜ் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என பேட்டி


சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாந்தராஜ் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2019 3:30 AM IST (Updated: 3 Aug 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாந்தராஜ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

சிவமொக்கா, 

சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாந்தராஜ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

சாந்தராஜ் பொறுப்பேற்றார்

கர்நாடக அரசு 11 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக, கடந்த 5 மாதங்களாக பணியாற்றி வந்த அஸ்வினி வேறு இடத்திற்கு மாற்றப் பட்டார்.

மேலும் சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாந்தராஜை மாநில அரசு நியமனம் செய்தது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாந்தராஜ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் தனது பொறுப்புகளை அஸ்வினி ஒப்படைத்தார். மேலும் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்க்க....

இதனை தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவமொக்கா அமைதியான மாவட்டம். இந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுப்பேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நகரில் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் அவர்களுடைய பிரச்சினை குறித்து என்னிடம் தெரிவிக்கலாம். எந்த நேரத்திலும் பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க நான் நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாந்தராஜுக்கு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர்கள், போலீசாரும் வாழ்த்துகளை கூறினார்கள்.

Next Story