ஆடிப்பெருக்கில் புனித நீராடிய போது காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிருடன் மீட்பு
ஆடிப்பெருக்கை கொண்டாட திருச்செங் கோட்டை அடுத்த பட்லூர் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடிய ஈரோட்டை சேர்ந்த தந்தை-மகன் ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டனர். இவர்களை திருச்செங்கோடு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நீண்டநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனிதநீராடி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தது. இதேபோல் திருச்செங்கோடு அருகே பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராட, ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 40), அவருடைய மகன் கிருஷ்ணன் (9) ஆகிய இருவரும் வந்தனர்.
அவர்கள் இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன், இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் இருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்துவிட்டு, ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்தி சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்து கொண்டி ருந்தார்.
இதனிடையே திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார், கோவிந்தசாமி, துரைராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் இறையமங்கலம் பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்லூர் காவிரி ஆற்றங்கரைக்கு விரைந்து வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் மோகன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இருந்ததை கண்டு மற்ற வீரர்களும் ஆற்றில் நீந்தி தந்தை-மகன் இருவரையும் நீண்ட நேரம் போராடி மயக்க நிலையில் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் முதலுதவி செய்து அவர்கள் வந்த தீயணைப்பு வாகன த்திலேயே இறைய மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய த்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் செயலை பாராட் டினார்கள்.
இதனி டையே தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து இந்த மீட்பு பணியில் ஈடுபட்டதை அந்த பகுதியில் நின்ற சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து தீயணைப்பு வீரர்களை பாராட்டி வாட்ஸ்-அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story