திருவாரூரில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் 80 பேர் கைது
தேசிய புலனாய்வு முகமையை கண்டித்து திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்- போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
தேசிய புலனாய்வு முகமையை கண்டித்தும், இதை உடனடியாக கலைக்க வேண்டும். என்.ஐ.ஏ. சட்டத்தை உடனடியாக திருப்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஜ்பூர்ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நவாஸ் முன்னிலை வகித்தார். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஜெயினுல்ஆபிதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது முஸ்லிம் சமுதாயத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
80 பேர் கைது
இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story