காவிரியில் தண்ணீர் வராததால் திருவாரூரில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா


காவிரியில் தண்ணீர் வராததால் திருவாரூரில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா
x
தினத்தந்தி 4 Aug 2019 4:00 AM IST (Updated: 4 Aug 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தண்ணீர் வராததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்ந்து வருகின்றன. இதில் திருவாரூர் மாவட்டம் முதன்மையாக விளங்குகிறது. உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து வரும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். குடும்பத்துடன் ஆறுகளுக்கு வந்து கரைகளில் படையலிட்டு வணங்கி மகிழ்ந்து வந்தனர்.

இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினையால் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படவில்லை. இதனால் காவிரில் தண்ணீர் வராததால் ஆறு, வாய்க்காலில் மக்கள் கூட்டம் இன்றி ஆடிப்பெருக்கு விழா கலை இழந்தது. இதனால் குளம், நீர் நிலைகள், மோட்டார் பம்பு செட்டுகள் ஆகிய இடங்களில் பெண்கள் படையலிட்டு வணங்கினர். இதேபோல் வீடுகளில் அடி பைப்புகள், தண்ணீர் குழாய்களில் மாலை அணிவித்து வழிபட்டனர்.

சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் காலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. குளத்தில் படிக்கட்டுகளில் மஞ்சளில் பிள்ளையார் உருவம் செய்து வைத்து காதோலை கருகமணியுடன், பேரிக்காய், வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி ஆகியவற்றை படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி கொண்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story