மாவட்ட செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் + "||" + Awareness Process for Child Safety

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்ஜெயங்கொண்டத்தில் நடந்தது.
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் படி, ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்ஜெயங்கொண்டத்தில் நடந்தது. ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரேமா (உடையார்பாளையம்), ஜெகதீசன் (ஆண்டிமடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வரவேற்றார். ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் துரைராஜன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் குழந்தை தொழிலாளரை ஒழிப்போம், குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப் போம். குழந்தைகளுக்கு பாலியல் சம்மந்தமான கல்வி அறிவை புகட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அண்ணாசிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கடைவீதி, 4 ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலைய ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு, அனைத்துமகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, அரியலூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுரை வழங்கினார்.
2. ஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது ஜக்கி வாசுதேவ் பேட்டி
ஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது என திருவாரூரில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.
3. கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி பேச்சு
கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி மோகனாம்பாள் கூறினார்.
4. அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
5. உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.