தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் ஆடி வளைகாப்பு விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் ஆடி வளைகாப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் ஆடி வளைகாப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அம்மன் கர்ப்பிணி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் படைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், இனிப்பு, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
விளாத்திகுளம்
இதேபோன்று விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஆடி வளைகாப்பு விழா நடந்தது. காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் கர்ப்பிணி கோலத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்களை படைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story