திருப்புவனத்தில் வாரச்சந்தையாக மாறிய ஊருணியை மீட்டு தூர்வாரிய வருவாய்த்துறையினர்


திருப்புவனத்தில் வாரச்சந்தையாக மாறிய ஊருணியை மீட்டு தூர்வாரிய வருவாய்த்துறையினர்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:15 AM IST (Updated: 4 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் வாரச்சந்தையாக மாறிய ஊருணியை மீட்டு தூர்வார வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மானாமதுரை,

திருப்புவனம் நகரில் குடிநீர் தேவைக்காக நகருக்குள் மட்டை ஊருணி, தாமரை ஊருணி, மார்க்கண்டேய தீர்த்த ஊருணி உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்து வந்தன. நாளடைவில் ஊருணிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி விட்டன. ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளை கண்டறியும் பணி தாசில்தார் ராஜா தலைமையில் நடந்து வருகிறது. வாரச்சந்தை செயல்பட்டு வந்த இடத்தில் ஆக்கிரமிப்பில் செய்யப்பட்ட ஊருணியை மீட்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று காலை வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து ஊருணியை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் 70 சென்ட் பரப்பளவுள்ள இந்த ஊருணியை தூர்வாரும் பணி தொடங்கியது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்புண்டு.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்த ஊருணியை ஆக்கிரமித்ததுடன் வாரச்சந்தையும் நடந்து வந்தது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலைகளை கண்டறியும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஊருணியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இந்த ஊருணியின் வரத்து கால்வாயையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story