சிறுபான்மையினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


சிறுபான்மையினருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:30 AM IST (Updated: 4 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினருக்கு கடன் வழங்க பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்விக்கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 20-ந்தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி திருப்புவனத்தில் வருகிற 20-ந்தேதி, சிவகங்கையில் 21-ந்தேதி, மானாமதுரையில் 22-ந்தேதி, இளையான்குடியில் 27-ந்தேதி, காளையார்கோவிலில் 28-ந்தேதி, சிங்கம்புணரியில் 29-ந்தேதி, திருப்பத்தூரில் அடுத்த மாதம் 3-ந்தேதி, காரைக்குடியில் 4-ந்தேதி, தேவகோட்டையில் 5-ந் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் தங்கள் பகுதியில் நடக்கும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

மேலும் கல்வி கடனிற்காக விண்ணப்பிக்கும் போது அந்தந்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story