வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது


வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2019 3:30 AM IST (Updated: 4 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் கடன் வாங்கித்தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடி குறித்து கோவைநகரமத்திய குற்றப்பிரிவு போலீசார்கூறியதாவது:-

கோவை,

கோவை சூலூர் கண்ணம்பாளையம் சேரன்நகரை சேர்ந்தவர்அப்துல் ரகீம். இவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக ரூ.30 லட்சம் வங்கியில் கடன் பெற விரும்பினார். ஏற்கனவே கடன் வாங்கித்தந்த கிருஷ்ணன் என்பவரை அணுகினார். கிருஷ்ணனும், அவருடைய நண்பர் செல்வகுமாரும் உப்பிலி பாளையத்தில் எஸ்.எஸ்.அசோசியேட்என்ற அலுவலகத்தை நடத்தி வந்தனர்.

ஸ்டேட் வங்கி மூலம் கடன் பெற்றுத்தருவதாகவும், இதற்கு ஆவணங்களை வழங்குமாறும் கேட்டனர். இதனை நம்பி அப்துல் ரகீம் கையெழுத்திட்டு ஆவணங்களையும், நிரப்பப்படாத காசோலைகளையும் வழங்கினார்.

இந்த காசோலைகளைபயன்படுத்திரூ.42 லட்சத்து 45 ஆயிரத்தை ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் கிருஷ்ணனும், செல்வகுமாரும் மோசடி செய்தனர். இதேபோல் மேலும் 8 பேரிடம் வங்கியில் கடன்வாங்கித்தருவதாக கூறிமொத்தம்ரூ.2 கோடி மோசடி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரகீம் இந்த சம்பவம் குறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்படி,துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில்,உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் நாகராஜன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜமுனா,ரேணுகா தேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்துகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். மோசடி ஆசாமி செல்வகுமார் ஏற்கனவே மோசடி வழக்கில், திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Next Story